×

பாகிஸ்தான் ராணுவ தளபதி சீனா பயணம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான், சீனா இடையே உறவுகளை மேம்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனிர் சீனா சென்றுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற அசீம் முனிர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் சவூதி அரேபியா, ஐக்கிய அரசு எமிரேட்சுக்கு அரசு முறை பயணம் சென்றார். தொடர்ந்து இங்கிலாந்து சென்ற அவர் மீண்டும் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் சென்றார். இந்நிலையில், பாகிஸ்தான், சீனா இடையேயான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக அசீம் முனிர் நான்கு நாள் அரசு முறை பயணமாக சீனா சென்றுள்ளார்.

The post பாகிஸ்தான் ராணுவ தளபதி சீனா பயணம் appeared first on Dinakaran.

Tags : Pakistan Army ,China ,Islamabad ,Chief General ,Asim Munir ,Pakistan ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா